Skip to main content

Posts

"இந்த வெற்றியை நான் கொண்டாடல" தலைவன் தலைவி பட இயக்குனர் கூறிய காரணம்....!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருப்பார்.  கணவன் மனைவிக்கு இடையேயான குடும்பச் சண்டை, பாசம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த தலைவன் தலைவி படத்தை எழுதி இயக்கியவர் இயக்குனர் பாண்டிராஜ் ஆவார். 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் தொடங்கி மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் என பல படங்களை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார்.  இந்நிலையில் பாண்டிராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியின் போது அவரிடம் தலைவன் தலைவி படத்தின் வெற்றியை கொண்டாடினாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாண்டிராஜ் "நான் எந்த வெற்றியையும் கொண்டாடவில்லை.  படம் வெளியானதை தொடர்ந்து பலரும் என்னிடம் திரையரங்கிற்கு சென்று வெற்றியை கொண்...
Recent posts

அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு.... 4 சிறுவர்கள் பலி.... நடந்தது என்ன....?

ஆந்திர பிரதேஷ் மாநிலம் விசாகப்பட்டினம் துவாரபுடி பகுதியில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் ஒன்று சரியாக லாக் ஆகாமல் இருந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை பார்த்து காரின் உள்ளே ஏறி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது சிறுவர்கள் தவறுதலாக காரை உள்ளிருந்து லாக் செய்து விட்டனர். இதனால் காரின் உள்ளே சிக்கிய சிறுவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. வெகு நேரமாக மூச்சு விட முடியாமல் போராடிய சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு சிறுவர்களும் 6லிருந்து 8 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.  காரின் உரிமையாளர் சரியாக காரை லாக் செய்யாதது தான் இத்தகைய சோக சம்பவம் நடந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நொடியில் நடந்த பேரிழப்பு.... குழந்தை உட்பட 5 பேர் பலி.... நஷ்ட ஈடு அறிவித்த அரசு....!!

  கோயம்புத்தூரை சேர்ந்த எட்டு பேர் குடும்பத்தோடு ஆம்னி வேனில் தூத்துக்குடி வெள்ளாளன்விளை பகுதியில் நடைபெற்ற பண்டிகை ஒன்றுக்காக வந்துள்ளனர். இந்த ஆம்னி வேன் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மீரான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக இருந்த கிணற்றுக்குள் எதிர்பாரா விதமாக பாய்ந்தது.  தண்ணீரில் மூழ்கிய ஆம்னி வேனில் இருந்து மூன்று பேர் நீந்தி உயிர் தப்பிய நிலையில் மீதம் ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். கிணற்றுக்குள் பாய்ந்து சகதியில் சிக்கிய ஆம்னி வேன் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மேலே கொண்டுவரப்பட்டது.  இந்த விபத்து வேனின் டயர் வெடித்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுநர் கண் அசந்ததால் ஏற்பட்டதா என சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கும் தல 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"பொள்ளாச்சி பாலியல் வழக்கு" 6 வருட விசாரணை.... 9 பேருக்கும் சாகும்வரை.... நீதிபதியின் அதிரடி தீர்ப்பு....!!

2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல்துறையினரிடம் தொடங்கி சிபிஐ வரை விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பல்வேறு கட்டங்களாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் ஃபோன்களில் இருந்து ஏராளமான காணொளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ இந்த வழக்கில் சாட்சிகளிடம் மொத்தம் 236 கேள்விகள் கேட்டதாகவும் அவற்றை 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கியாக தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு ஐந்து ஆண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி அவர்களால் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் அவருக்கு பணியிட மாற்றம் வழங்கிய போது உயர் நீதிமன்றத்தின் தலையிட்டால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று நீதிபதி நந்தினி அவர்கள் இந்...

இந்தியா பாகிஸ்தான் மோதல்... மீண்டும் மீண்டும் தாக்குதல்.... எப்போது முடிவுக்கு வரும்....?

ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் என தெரியவந்தது.  இதை தொடர்ந்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. இதற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. அதோடு எல்லையிலும் போர் ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்து' மூலமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.  இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானும் பயணிகள் விமானத்தை பயன்படுத்தி ட்ரோன்கள் மூலமாக இந்திய குடியிருப்பு பகுதிகளையும் ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அவற்றை இந்திய ராணுவம் வானிலேயே தகர்த்தது.  இவ்வாறு கடந்த நான்கு நாட்களாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் நடைபெற்றது இதனிடையே இரண்டு நாடுகளுக்கு இடையேயான இந்தப் போ...

30 வருட சினிமா வாழ்க்கை.... புற்றுநோயால் காலமான பிரபல நடிகர்....!!

திரையுலகில் 30 வருடங்களாக சூரரைப் போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சூப்பர் குட் சுப்ரமணி. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார்.  உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனராக ஆசைப்பட்டார். ஆனால் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் நடிகராக களம் இறங்கினார். ஜெய் பீம் திரைப்படத்தில் காவலராக சுப்ரமணி அவர்கள் நடித்திருந்தது ரசிகர்கள் நினைவில் கொள்ளும் படி அமைந்திருந்தது.  சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சூப்பர் குட் சுப்ரமணி புற்றுநோயின் நான்காம் கட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் குட் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.